என்எல்சி இரண்டாவது சுரங்கப் பகுதியில் உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடும், வாரிசுக்கு நிரந்தர வேலையும் வழங்க கோரி இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்த முற்றுகையிட்டு போராட்டம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளி கருணாநிதி ( 57 )இவர் நேற்று இரவு பணி முடிந்து சுரங்கத்திலிருந்து வெளியே வரும் நுழைவாயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
அவரது குடும்பத்துக்கு, உரிய இழப்பீடும், வாரிசுக்கு நிரந்தர வேலையும் வழங்க கோரி வேப்பங்குறிச்சி கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் என்எல்சி இரண்டாவது சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக